ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் - டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.20 கோடிக்கு மது விற்பனை :

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.20 கோடியே 15 லட்சத்துக்கு மதுபான பாட்டில்கள் விற்பனையானது. 2-வது நாளான நேற்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க இன்று (மே-10-ம் தேதி) முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு தேவையான அத்தி யாவசியப் பொருட்களான காய்கறி, மளிகை, பால், மருந்து, பெட்ரோல் உள்ளிட்டவை தவிர்த்து அனைத்து கடைகளும் ஊரடங்கு காலத்தில் மூடியிருக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதையொட்டி, ஊரடங்கை எதிர்கொள்ள உள்ள அனைத்து வியாபாரிகளும் தங்களது கடை களை கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையான (நேற்றும்) திறந்து வியாபாரம் செய்தனர்.

அரசு உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மே 10-ம்தேதி (இன்று) முதல் 24-ம் தேதி வரை மூடியிருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சனிக் கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்திருந்தன.

2 வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவை யான மதுபான பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.

இந்த அறிவிப்பு வெளியானதை அறிந்த மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடை முன்பாக குவிந்தனர். அவர் கள், மதுவகைகளை வாங்கிக் கொள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர்.

நேற்று முன்தினம் காலை முதலே டாஸ்மாக் கடைகள் முன்பு மதுப் பிரியர்கள் குவிந்து தங்களுக்கு பிடித்தமான மதுவகைகளை வாங்கிச் சென்றனர்

வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.13 கோடியே 85 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்று தீர்ந்தன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 30 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை (நேற்று முன்தினம்) ஒரே நாளில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ரூ.20 கோடியே 15 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

இந்நிலையில், 2-வது நாளான நேற்றும் 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. காலை முதல் வரிசையில் நின்ற மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான ஹாட் மற்றும் பீர் வகைகளை பெட்டி, பெட்டியாக வாங்கிச்சென்றனர்.

கூடுதலாக மது விற்பனை

நேற்று மது விற்பனைக்கான கணக்கெடுப்பு இரவு தான் தெரிய வரும் என்பதால் 2-வது நாள் மதுவிற்பனை எவ்வளவு என்பது தற்போது தெரிய வாய்ப்பில்லை என்றும், முதல் நாளை காட்டிலும் 2-வது நாள் கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதால் முதல் நாளை காட்டிலும் 2-வது நாள் கூடுதலாக மதுபானங்கள் விற்பனை அதிகமாகத்தான் இருக் கும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்