கரோனா நிவாரணம் வழங்குவதை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நிவாரணத் தொகையை வழங்குவதை கண்காணிக்க வட்ட அளவில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள முதற்கட்ட கரோணா நிவாரணத் தொகை வழங்கும் பணி தி.மலை மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக, நியாய விலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10-ம் தேதி (இன்று) முதல் 12-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் டோக்கன் வழங்கப்பட்ட 200 பேருக்கு, கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

இதையொட்டி, கரோனா நிவாரணத் தொகை வழங்குவதை கண்காணிக்க வட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை வட்டத்துக்கு தி.மலை கோட்டாட்சியர் வெற்றிவேல் (செல்போன் எண்–94450-00420), செங்கம் வட்டத்துக்கு சமூக பாதுபாப்புதிட்ட தனித் துணை ஆட்சியர் வெங்கடேசன் (செல்போன் எண் –94454-61753), தண்டராம்பட்டு வட்டத்துக்கு ஊராட்சிகள் உதவி இயக்குநர் சுரேஷ்குமார் (செல்போன் எண் – 74026-06611), கீழ்பென்னாத்தூர் வட்டத்துக்கு கலால் உதவி ஆணையர் கண்ணப்பன் (செல்போன் எண் – 94440-61790), ஆரணி வட்டத்துக்கு சிப்காட் நிலம் எடுப்பு தனித் துணை ஆட்சியர் நாராயணன் (செல்போன் எண் – 94452-29549), போளூர் வட்டத்துக்கு மாவட்ட விநியோக அலுவலர் எம்.ரமேஷ் (செல்போன் எண் – 94450-00193) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கலசப்பாக்கம் வட்டத்துக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ்.பார்த்திபன் (செல்போன் எண் – 80728-94244), ஜமுனாமரத்தூர் வட்டத்துக்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி (செல்போன் எண் – 93642-20624), செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டத்துக்கு செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ் (செல்போன் எண்– 94450-00419), சேத்துப்பட்டு வட்டத்துக்கு ஊராட்சிகள் உதவி இயக்குநர் (செய்யாறு) சுவாமி நாதன்(செல்போன் எண்– 74029-03703), வந்தவாசி வட்டத் துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதாலட்சுமி (செல்போன் எண்–94451-64756) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கட்டுப்பாட்டு அறையின் 04175–233063 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்