முழு ஊரடங்கு அறிவிப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று மதுப்பிரியர்கள் குவிந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 120 அரசு டாஸ்மாக் கடைகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 102 டாஸ்மாக் கடைகள் என ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 222 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
நாளை முதல் 24-ம் தேதிவரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று நேற்று காலை அறிவிக்கப்பட்டது.
இத்தகவலை அறிந்த மதுப்பிரியர்கள் நேற்று காலை 9 மணி முதல் டாஸ்மாக் கடைகள் முன்பு குவிய தொடங்கினர். இதனால் டாஸ்மாக் விற்பனையாளர்கள் கடை மூடும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதா அல்லது பிற்பகல் 12 மணிக்கு மூடுவதா என தெரியாமல் தவித்தனர். இதற்கிடையே கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்லவே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகள் முன்பு கூடிய கூட்டத்தை டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான போலீஸார் ஒழுங்குபடுத்தி வரிசையில் நிற்கவைத்தனர்.
தற்போதைய இருப்புக்கு ஏற்றவாறு ஒருவருக்கு 2 பாட்டில்கள் மட்டும் வழங்கப்படும். இன்று (நேற்று) மாலை 6 மணி வரைகடைகள் இயங்கும் என அறிவித்தனர். அதன்பின் கத்தரி வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிசென்றனர். இதனால் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago