விழுப்புரம் மாவட்டத்தில் நாளைமுதல் முழு ஊரடங்கு அமலுக்குவருவதால், இன்று இரவு 9 மணிவரை கடைகள் இயங்கும் எனமாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி நகராட்சி அலுவலகம் வரை ஆட்சியர் அண்ணாதுரை நேற்று ஆய்வுமேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கை கழுவும் திரவம் மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
சமூக இடைவெளியினை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் இயங்கிய கடைக்கு அபராதம் விதிக்க நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பேருந்துகளில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது எஸ்பி ராதாகிருஷ்ணன், டிஎஸ்பி நல்லசிவம், விழுப்புரம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
கரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை ( மே 10) முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல இன்று இரவு 9மணி வரை அனைத்து அத்தியாவசிய கடைகளும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனைத்து வகையான அத்தியாவசிய கடைகள் முற்றிலும் இயங்க அனுமதியில்லை என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago