மதுரை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை 90 சதவீதம் அதிகரிப்பு - ‘ஸ்டெர்லைட்’உற்பத்தியில் மதுரைக்கு முன்னுரிமை கிடைக்குமா? :

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

ஸ்டெர்லைட் ஆலை யில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் மது ரைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி ஆட்சியரிடம் மதுரை ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே ரூ.350 கோடி யில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ‘கரோனா’ சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கரோனா நோயாளிகளுக் காக 1,100 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. 250 சாதாரண படுக்கை ளும் உள்ளன.

இதுதவிர மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த தோப்பூர் அரசு காச நோய் மருத்துவமனையில் 250 ஆக்சிஜன் படுக்கைகள் உள் ளன. தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். அதனால் ஆக்சி ஜன் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின் றனர்.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆட்சியர் அன்பழகன் ஆய்வு செய்து, டீன் சங்குமணி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தி யாளர்களிடம் ஆட்சியர் கூறியதா வது:

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் நோயாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்ப டுகிறது. மதுரையில் ஆக்சிஜன் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் 26 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் தேவைப் படுகிறது. தற்போது வரை அது தடையில்லாமல் கிடைக்கிறது. ஆனால் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான்.

தற்போது நோயாளிகளுக்கு ஆரம்பத்திலேயே மூச்சுத் திண றல் ஏற்படுகிறது. அதனால் பாதிக்கப்படுகிற அனைத்து நோயாளிகளுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 2 ஆக்சிஜன் உற் பத்தி நிலையங்கள் உள்ளன. மேலும் பல இடங்களில் இருந்து மதுரை மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய் யப்படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் மதுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து வழங்க அம்மாவட்ட ஆட்சியரிடம் பேசி வருகிறோம். அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களைச் சேர்ந்த நோயா ளிகள் அதிகளவு சிகிச்சை பெறு கின்றனர்.

இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் மதுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து வழங்கும் படி கேட்டுக் கொண்டுள்ளோம். மதுரையில் முன்பிருந்ததைக்காட்டிலும் ஆக்சிஜன் தேவை 90 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால்தான் இங்குள்ள ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்