ஊரடங்கு அறிவிப்பால் கடை வீதிகளில் - அத்தியாவசிய பொருட்கள் வாங்க திரண்ட மக்கள் : ஒரே நாளில் 30 டன் காய்கறிகள் விற்பனை

By செய்திப்பிரிவு

ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுரை, விருதுநகர் மாவட் டங்களில் மளிகை, காய்கறி உட் பட பல்வேறு பொருட்களை வாங்க பொதுமக்கள் சமூக இடை வெளியின்றி திரண்டனர். உழவர் சந்தைகளில் ஒரே நாளில் 30 டன் காய்கறிகள் விற்பனையானது.

கரோனா இரண்டாவது அலை பரவுவதைத் தடுக்கும் வகை யில் தமிழக அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை (மே 10) முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால் அத்தியாவசியப்பொருட்களை மக்கள் வாங்குவதற்காக நேற்றும், இன்றும் ஊரடங்கில் சில விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் மளிகைப்பொருட்கள், காய் கறிகள் வரும் நாட்களில் கிடைக்குமா?, கிடைக்காதா? என்ற பதற்றத்தில் மதுரையில் மளிகை, காய்கறிக் கடைகளில் பொருட்கள், காய்கறிகள் வாங்கப் பொதுமக்கள் குவிந்தனர். இதே போல் பழக்கடைகளிலும் மக்கள் குவிந்ததால் போலீஸார் அவர் களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

உசிலம்பட்டி காய்கறி சந்தை, பேருந்து நிலையம், முக்கிய சாலைகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகக் காணப்பட்டது.

இதனால் பொருட்கள் வழங்க முடியாமல் வியாபாரிகள் தவித் தனர்.

விருதுநகர்

விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, சிவகாசி, காரியாபட்டி, வில்லிபுத்தூர் ஆகிய ஊர்களில் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடை வீதிகளிலும், காய்கறிகளை வாங்க மார்க்கெட்டுகளிலும் ஏராளமானோர் குவிந்தனர். ராஜ பாளையம், அருப்புக் கோட்டை உழவர் சந்தைகளில் நேற்று ஒரே நாளில் 30 டன் காய்கறிகள் விற்றுத்தீர்ந்தன. அனைத்து ஊர்களிலும் காய்கறி, பழங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. ஆனால், சமூக விலகலைக் கடைப்பிடிக்காததால் சுகாதார அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்