அரசு முதன்மைச் செயலாளரும், தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அ.கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி முன்னிலை வகித்தார்.
மாவட்டத்தில் மேற்கொள் ளப்படும் கரோனா பரவல் தடுப்புப் பணிகள், சுகாதாரத் துறையினர் செயல்பாடு குறித்து பகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பல்வேறு துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு நடத்தினார்.
மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் இருப்பு, ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல் பாடு, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள், தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை, மருத் துவமனைகளில் படுக்கை வசதிகள், தடுப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கேட்ட றிந்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) தியாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.மணி, சார்ஆட்சியர் டி.சிநேகா, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago