திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் 675 அரசு நகர்ப்புற பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம்மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற பேருந்துகளில் நேற்று முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நகர்ப்புற பேருந்துகளில் நேற்று காலை முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 180, தென்காசி மாவட்டத்தில் 80, தூத்துக்குடி மாவட்டத்தில் 120, குமரி மாவட்டத்தில் 295 என்று, மொத்தம் 675 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளின் முகப்பு கண்ணாடிகளில், மகளிருக்கு இலவச பயணம் என்றஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. திருநெல்வேலி சந்திப்பிலிருந்து டவுன், பேட்டை, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், சமாதானபுரம், ஹைகிரவுண்ட், நீதிமன்ற பகுதி, கேடிசி நகர்உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்ட நகர்ப்புற பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்தனர். மாநகரில் இயக்கப்படும் சிவப்புவண்ண பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இலவச பயணம் குறித்து தெரியாமல் நகர்ப்புற பேருந்துகளில் ஏறி பயணம் செய்த பெண்கள் சிலர்டிக்கெட்டுக்கு காசு கொடுத்தனர். ஆனால், அதை நடத்துநர்கள் திருப்பி கொடுத்து, அரசின் இலவசபயண அறிவிப்பு குறித்து தெரிவித்தனர். நகர்ப்புற பேருந்துகளில் அரசின் இலவச பயணத் திட்டம் குறித்து பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நாகர்கோவில்
குமரி மாவட்டத்தில் மகளிர் இலவசப் பயணத்துக்காக மொத்தம் 295 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே நேரம் சிவப்பு நிற தாழ்தளப் பேருந்துகள், பாயின்ட் டூ பாயின்ட் மற்றும்25 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்த பெண்கள் பலர் நடத்துநர்கள் பயணச்சீட்டு எடுக்குமாறு கேட்டபோது, தங்களுக்கு இலவசப் பயணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago