கரோனா தொற்று அதிகரிக்கும் என்பதால் - காய்ச்சல் இருப்பவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் : வேலூர் மாவட்ட சுகாதார துறையினர் அறிவுரை

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் மே மாதம் மத்தியில் கரோனா தொற்று எண் ணிக்கை அதிகரிக்கும் என்பதால் சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவப் பரி சோதனை செய்துகொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 600-ஐ கடந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 611-ஆக இருந்தது. இவர்களில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடல் நலக்குறை வால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் அரசு மருத்துவக் கல்லூரியில் தினசரி காலையில் கரோனா தொற்றுடன் வரும் நோயாளிகளில் பெரும் பாலானவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகின்றனர்.

அவர்கள் அவசர சிகிச்சை பிரிவு முன்பாக பல மணி நேரம் காத்திருக்கின்றனர். போதிய மருத் துவப் பரிசோதனையை விரைவாக முடிக்காததால் தாங்கள் காக்க வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் வரும்போது இதுபோல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மே மாதம் மத்தியில் வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அதற்கு ஏற்றவாறு படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் செவிலியர்கள், மருத்துவர்கள் போதிய அளவில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு கரோனா நோயாளியையும் பரிசோதனை செய்ய குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் ஆகும். அவர் சென்ற பிறகு அடுத்த நபர் என்று கணக் கிட்டால் காலதாமதம் ஏற்படும். மற்றபடி படுக்கை வசதிகள் சிகிச்சைகளில் எந்த குறையும் இல்லை.

கரோனா அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே பொதுமக்கள் பரிசோதனை செய்துகொள்ளலாம். அதன்மூலம் மூச்சுத்திணறல் ஏற்படுவதை தடுக்க முடியும். ஒரு சிலர் கரோனா பாதிப்பு ஏற்பட்டு 10 நாட்களுக்கு பிறகு இக்கட்டான சூழ்நிலையில் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தான் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனடி யாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’’ என்றனர்.

ஒரு சிலர் கரோனா பாதிப்பு ஏற்பட்டு 10 நாட்களுக்கு பிறகு இக்கட்டான சூழ்நிலையில் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தான் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்