சேத்துப்பட்டு அருகே 3 செவிலி யர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தச்சாம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 நாட்களுக்கு பொது சிகிச்சைக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டு அடுத்த தச்சாம்பாடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு பணிபுரியும் 3 செவிலியர்கள் உட்பட 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது.
இதையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருமி நாசினி மருந்து தெளித்து மூடப்பட்டது.
மேலும், மூன்று நாட்களுக்கு பொது சிகிச்சைக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்கு மட்டும் நோயாளிகள் அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago