தி.மலை மாவட்டத்தில் அத்தியா வசியப் பொருட்களை வாங்க பேருந்துகள் மூலம் நகர பகுதிக்கு கிராம மக்கள் அதிகளவில் திரண்ட தால் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால், ஒவ்வொரு நாளும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின் றனர். மேலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 200-ஐ கடந்து விட்டது. இதன் எதிரொலியாக, கரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது.
இந்நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 10-ம் தேதி (நாளை)அதிகாலை 4 மணிக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இதையொட்டி, ஞாயிற்றுக் கிழமையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விலக்கி கொள்ளப் பட்டதால், சனிக் கிழமையான நேற்று கடைகள் முழுநேரம் செயல்பட்டன.
அதேபோல், இன்று மாலை வரை கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து களும் தடையின்றி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதால், தி.மலை மாவட்டத்தில் மளிகை கடைகள், காய்கறி மற்றும் இறைச்சி அங்காடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகையையொட்டி, துணிக் கடைகளில் கூட்டம் கணிசமாக இருந்தது. மேலும், சொந்த ஊர்களுக்கு நேற்று மக்கள் அதிகளவில் திரும்பி உள்ளனர்.
அதேபோல், பல்வேறு கிராமங்களில் வசிப்பவர்கள், அத்தியாவசியப் பொருட்களை வாங்கபேருந்துகள் மூலமாக நகர பகுதிக்கு வந்து சென்றனர். இதனால், கடைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் பொதுமக் கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago