கரோனா புதிய கட்டுப்பாட்டுகளை மீறும் - கடைகளுக்கு நிரந்தர தடை விதிக்க நேரிடும் : கள்ளக்குறிச்சி ஆட்சியர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா புதிய கட்டுப்பாட்டுகளை மீறும் கடைகளுக்கு நிரந்தர தடை விதிக்க நேரிடும் ஆட்சியர் கிரண் குராலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சின்னசேலம், கச்சிராப்பாளையம், வடக்கனந்தல் பகுதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6-ம் தேதி முதல் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. மளிகை, காய்கறி, தேநீர், பழச்சாறு கடைகள் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதர கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி இல்லை.

இதனை கண்காணித்திட வருவாய்த் துறை,காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் ஒருங்கிணைத்து கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கச்சிராப்பாiளையம் பழைய பேருந்து நிலைய பகுதி,வடக்கனந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட எல்.எப். ரோடு, புதிய பேருந்து நிலையம், டேம் ரோட்டில் உள்ள வங்கி, மற்றும் சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தஆய்வின் போது கரோனாநெறிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்டு வந்த சின்னசேலம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடை, மூங்கில்துறை ரோட்டில் உள்ள பெட்டிக்கடை, மோட்டார் பழுது நீக்கும் கடை ஆகிய கடைகள் சீல் வைக்கப்பட்டன.

கரோனா நெறிமுறைகளை மீறி செயல்படும் கடைகளுக்கு நிரந்தர தடை விதிக்க நேரிடும்என தெரிவித்தார். சின்னசேலம் வட்டாட்சியர் விஜய் பிரபாகரன்,வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்