கரோனா: நெல்லை, குமரி, தென்காசியில் 21 பேர் மரணம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 655 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டது. இதில் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மட்டும் 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: அம்பாசமுத்திரம்- 44,மானூர்- 53, நாங்குநேரி- 24, பாளையங்கோட்டை- 70, பாப்பாகுடி- 8, ராதாபுரம்- 59, வள்ளியூர்- 95, சேரன்மகாதேவி- 35, களக்காடு- 19. திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தற்போது 2,400-க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 480 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று 12 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக 855 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,200 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 23,651 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வைகுண்டம் காவல் நிலையத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஆறு காவலர்கள், அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 322 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 208 பேர் குணமடைந்தனர். இதுவரை 11 ஆயிரத்து 863 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் நேற்று உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்