தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் திறக்கப்பட்ட 32 கடைகளுக்கு ரூ.41,500 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு கரோனா தொற்று பரவல் அதிகரித்துவிட்டது. அதேபோல், உயிரிழப்புகளும் உயர்ந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமை ஊரடங்கு என தொடங்கிய கட்டுப்பாடுகள், மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடை களை தவிர, இதர கடைகளை திறக்க தடை விதித்துள்ளது. மேலும், தினசரி திறக்கப்படும் அத்தியாவசிய கடை களும் பகல் 12 மணியுடன் மூட வேண்டும் என்ற உத்தரவும் கடந்த 2 நாட்களாக அமலில் உள்ளது.
இந்நிலையில் திருவண்ணா மலை மாவட்டத்தில், தமிழக அரசின் உத்தரவை மீறும் கடை உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகின்றன. மேலும், ஒரு சில இடங்களில் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படுகிறது.
இந்நிலையில் செய்யாறு வட்டத்தில் விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகள் மீது நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள், காய்கறி கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து எலெக்ட்ரிக்கல், ஹார்ட்வேர், செல்போன், துணிக்கடைகள், பேன்ஸி பொருட்கள், பெட்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறந்திருந்தன. தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூடினர். அவர்களை கட்டுப்படுத்த, கடையின் உரிமை யாளர்கள் தவறினர்.
இதற்கிடையில் கோட்டாட்சியர் விஜயராஜ் தலைமையிலான குழுவினர் செய்யாறு பேருந்து நிலையம், காந்தி சாலை, லோக நாதன் தெரு சந்திப்பு, பஜார் வீதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பல கடைகள் விதிகளை மீறி செயல் படுவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அதன்படி, வட்டாட்சியர் திருமலை தலைமை யிலான குழுவினர் 10 கடைகளுக்கு ரூ.14 ஆயிரம் அபராதமும், நகராட்சி ஆணையாளர் பிரித்தி தலைமை யிலான குழு வினர் 22 கடைகளுக்கு ரூ.27,500 அபராதமும் விதித்து வசூலித்தனர்.
மேலும் அவர்கள், தமிழக அரசின் கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்படும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என எச்சரித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago