தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எருமைநாயக்கன்பட்டியில் 30 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த வீட்டை காலி செய்யச் சொன்னதால் இரண்டு பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள எருமைநாயக்கன் பட்டி பகுதியில் சின்னு மகன் வெள்ளைச்சாமி என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி 4 குழந்தைகளுடன் குடியிருந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முத்துமாடன் என்பவர் அவருக்குச் சொந்தமான நிலத் துக்கு பாதை வேண்டும் என்றும் புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும் வெள்ளைச்சாமி என்பவரை வெளியேற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று அகற்றல் பணி நடந்தது.
பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் இளங்கோ தலைமையில் வரு வாய்த்துறையினர் வீட்டைக் காலி செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளைச்சாமி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
மேலும் இவர்களுக்கு ஆதர வாக பொதுமக்கள் சிலரும் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனால் வருவாய் மற்றும் காவல் துறையினர் ஊர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வீட்டைக் காலி செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago