கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு - பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க ஆட்சியர் வேண்டுகோள் :

By செய்திப்பிரிவு

தமிழக அரசு மேற்கொண்டு வரும் கரோனா தொற்று தடுப்பு நடவ டிக்கைக்கு அரியலூர் மாவட்ட மக் கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியர் த.ரத்னா வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் களப் பணியாளர்கள் மூலமாக இதுவரை 1,66,805 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. தற்போது 341 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.

இதில் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 122 பேரும், கரோனா மையங்களில் (கோவிட் கேர்) 106 பேரும், தனியார் மருத்துவ மனைகளில் 35 பேரும் மற்றும் வீட்டுத் தனிமைப்படுத்தல்களில் 78 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா தொற்றால் இதுவரை 5,772 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,378 பேர் குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகியவற்றுக்காக இதுவரை அபராதமாக ரூ.64,74,800 வசூலிக்கப்பட்டுள்ளது பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, கூட்டங்களை தவிர்ப்பது மற்றும் தமிழக அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றுவது என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்