ஆரணியில் கரோனா தொற்று பரவலை தடுக்க கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வேகமாக பரவி வருகிறது. இதனால், முன்னெச் சரிக்கை தடுப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட் டுள்ளனர். மேலும், முகக்கவசம் அணியாமல் உள்ளவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்தல், விதிகளை மீறி செயல்படும் கடைகளுக்கு ‘சீல்’ வைத்தல் மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், பொது இடங்கள் மட்டும் இல்லாமல் கடைகளின் முகப்பு கதவுகள் மற்றும் வீடுகளின் சுற்றுச் சுவர், கதவுகள் ஆகியவற்றின் மீது கிருமி நாசினி தெளிக்கும் பணி யில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டிராக்டர் மூலமாகவும், நடந்து சென்றும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி ஊழி யர்கள் கூறும்போது, “சுகாதாரத் துறை வழிகாட்டுதலின் படி தொற்று பரவல் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா ஒழிக்க எங்களுடன் மக் களும் கைக்கோர்க்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பின்றி கரோனா தொற்று பரவலை முழுமையாக ஒழிக்க முடியாது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago