விழுப்புரத்தில் பெண்கள் மற்றும்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவலர்களுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு பெண் காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையில் இப்பிரிவு காவலர்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக 1098, 181 என்றகட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தி வருகின்றனர். வரக்கூடிய புகார்களை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் இப்பிரிவு காவலர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிங்க் வண்ணத்தில் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி விழுப்புரம் மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு முதல்கட்டமாக 18 ஸ்கூட்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்கூட்டர்களை நேற்று விழுப்புரம் எஸ்பி எஸ்.ராதாகிருஷ்ணன் காவலர்களுக்கு வழங்கினார். ஏடிஎஸ்பி தேவநாதன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago