சிதம்பரம் இரவு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
சிதம்பரத்தில் நடராஜர் கோயிலை சுற்றியுள்ள கீழ, மேல, தெற்கு, வடக்கு வீதிகளில்அதிக அளவில் வணக நிறுவனங்கள் உள்ளன. அண்ணாமலை பல்கலைக் கழகம் உள்ளது. ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இது மாவட்ட கரோனா மையமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிதம்பரத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் நேற்று அதிகாலை வரை மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் வீடுகளில் தூக்கிக் கொண்டிருந்த மக்கள் அவதியடைந்தனர். வீடுகளில் காற்றோட்டம் இல்லாததால் இரவுமுழுவதும் குழந்தைகள் அழுதன. மின் வெட்டால் மக்கள்பல வகையிலும் பாதிக்கப்பட்டனர். "செம்மங்குப்பம் உள்ள 110 மெகா வாட் மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் மின்வெட்டு ஏற்பட்டது" என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago