ஊராட்சிகளில் நிதி பற்றாக்குறை கிருமிநாசினி தெளிப்பதில் சிக்கல் : சிறப்பு நிதி ஒதுக்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தில் பல ஊராட் சிகளில் போதிய நிதியில்லாததால் பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளிக்க முடியாத சூழல் உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் டி.வெங் கடேசன் ஆட்சியருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு:

தேனி மாவட்டத்தில் கரோ னாவைத் தடுக்க உரிய முன் னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டுகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். பலரும் சமூக இடைவெளியை பின்பற் றாததுடன், முகக் கவசமும் அணிவதில்லை. அனைத்து மருத்துவமனைகள், சுகாதார மையங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. எனவே, கூடுதல் தடுப்பூசிகளை வர வழைக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்படும் மையங்களில் (கேர் சென்டர்கள்) உணவு, குடிநீர் கழிப்பிட வசதிகள் சரியாக இல்லை. கடந்த காலங்களைப்போல கபசுரக் குடிநீர் கரோனா தொற்று உள்ள அனைவருக்கும் வழங்க வேண் டும். கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

பல ஊராட்சிகளில் நிதியின்றி பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள் ளவில்லை எனவே ஆட்சியர் சிறப்பு நிதி ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்