திண்டுக்கல்லில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 3 ஜவுளி கடைகளுக்கு சீல் :

By செய்திப்பிரிவு

கரோனா 2-வது அலை தமிழகத்தில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை முழுமையாக அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் நகரில் உள்ள ஜவுளிக் கடைகளில் பின்வாசல் வழியே மறைமுகமாக வியாபாரம் நடந்து வந்தது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதிய துணிகள் எடுக்க ஏராளமானோர் கூடினர்.

இதையறிந்த மாநகராட்சி நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலை மையில் சென்ற அலுவலர்கள் மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஜவுளி கடை மற்றும் கிழக்கு ரத வீதி, கோயில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளுக்கு சீல் வைத்து தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்