சங்கரன்கோவிலில் 70 மிமீ மழை :

தென்காசி மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் கடந்த சில நாட்களாக, ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 70 மி.மீ. மழை பதிவானது. தென்காசியில் 6.20 மிமீ, சிவகிரியில் 6, ராமநதி அணையில் 5, செங்கோட்டையில் 4 மற்றும் குண்டாறு அணையில் 2 மிமீ மழைபதிவானது. கடனாநதி அணை நீர்மட்டம் 66.80 அடியாகவும், ராமநதிஅணை56.50, கருப்பாநதி அணை49.87 மற்றும் குண்டாறு அணை நீர்மட்டம் 28.50 அடியாகவும் இருந்தது. அடவிநயினார் அணை வறண்டு கிடக்கிறது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 15 மிமீ மழை பதிவாகியிருந்தது. கொடுமுடியாறு அணைப் பகுதியில்10 மிமீ, சேரன்மகாதேவியில் 4 மிமீமழை பெய்துள்ளது. மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர் இருப்பு (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்): பாபநாசம்- 102.10 அடி (143 அடி),சேர்வலாறு- 115.02 அடி (156), மணிமுத்தாறு- 88.05 அடி (118), வடக்குபச்சையாறு- 42.78 அடி (50), நம்பியாறு- 12.53 அடி (22.96), கொடுமுடியாறு- 5 அடி (52.25).

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிருடன் கூடிய தட்பவெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக சுருளகோட்டில் 74 மிமீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறையில் 59 மிமீ, பெருஞ்சாணியில் 21, பூதப்பாண்டியில் 30, சி ற்றாறு ஒன்றில் 41, கன்னிமாரில் 12, புத்தன் அணையில் 19, சிவலோகத்தில் 38, தக்கலையில் 21, அடையாமடையில் 14, முக்கடல் அணையில் 22 மிமீ மழை பெய்திருந்தது.

பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 431 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 41.45 அடியாக உயர்ந்தது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 116 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளநிலையில், நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்துள்ளது. சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் 6 அடியை கடந்தது. பொய்கையில் 17.20 அடி, மாம்பழத்துறையாறில் 14.60 அடியாக நீர்மட்டம் உள்ளது. மழை பெய்தாலும் முக்கடல் அணைக்கு நீர்வரத்து இல்லாததால் 1.6 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்