புளியங்குடியில் கரோனா நெறிமுறைகளை மீறியதாக 3 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நகராட்சி ஆணையர் குமார்சிங் தலைமையில், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். புளியங்குடி புதிய மார்க்கெட், பழைய மார்க்கெட், காந்தி பஜார் மற்றும் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு நடந்தது.
இதில், 3 ஆயிரம் சதுரஅடிக்கு மேல் உள்ள கடைகளை திறக்கக்கூடாது என்ற அறிவிப்பை மீறி செயல்பட்ட 3 பெரிய ஜவுளி நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகளை கடைபிடிக்காத 13 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், முகக்கவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் 24 பேருக்கு ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத 15 பேருக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சோதனையில் மொத்தம் ரூ.77,300 அபராதம் வசூலானது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago