மேற்குவங்க தேர்தல் வன்முறை யில் 12 பேர் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி, பாஜக சார்பில் திருநெல்வேலி தச்சநல்லூர் காந்தி சிலைமுன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வடக்கு மண்டல தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதுபோல், திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் தெற்கு மண்டல பொறுப்பாளர் முருகப்பா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் கணேசமூர்த்தி, முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தென்காசி
இதுபோல், செங்கோட்டையில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரத் தலைவா் வேம்புராஜ் தலைமை வகித்தார். நகர பொதுச்செயலாளா் காளி, நகர துணைத்தலைவா் பால சுப்பிரமணி, மணிகண்டன் ஆகி யோர் முன்னிலை வகித்தனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மேற்கு மண்டல தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பி.எம்.பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷமிட்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக நகர தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய தலைவர் லட்சுமணன், வர்த்தகர் அணி மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் ஜீவா கண்ணன் முன்னிலை வகித்தனர். ஏராளமானோர் பங்கேற்றனர்.இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago