வேலூர் நாராயணி பீடம் சார்பில் 2-வது தவணை இலவச தடுப்பூசி முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.இதன் மூலம் 1,000 பேர் பயனடைந்தனர்.
வேலூர் புரம், நாராயணி பீடம் மற்றும் தமிழக சுகாதாரத்துறை சார்பில், 2-வது தவணை கரோனா இலவச தடுப்பூசி முகாம் நாராயணி பீடத்தில் உள்ள அன்னலட்சுமி மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
புரம், நாராயணி பீடத்தின் இயக்குநர் மற்றும் அறங்காவலர் எம்.சுரேஷ் இலவச தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். மே 4-ம் தேதி மற்றும் மே 5-ம் தேதி என 2 நாட்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில், புரம் மற்றும் திருமலைக்கோடி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள், தங்கும் விடுதி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என 1,000 பேர் கலந்துகொண்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை புரம் மற்றும் நாராயணி பீடம் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago