திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில்கோடை மழை தொடர்வதால்பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டிவதைத்து வருகிறது. அவ்வப்போது ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கோடை மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் பல்வேறு இடங்களில் மழைபெய்தது. நேற்று காலை 8 மணிவரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் 36 மிமீ, அம்பாசமுத்திரத்தில் 10 மிமீ, மூலக்கரைப்பட்டியில் 7 மிமீ மழை பதிவானது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 4 மிமீ மழை பதிவானது. நேற்று பகலில் பணகுடி, காவல்கிணறு, வள்ளியூர், களக்காடு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 102.35 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 96.63 கனஅடி நீர் வந்தது. 254.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 115.32அடியாக இருந்தது. மணிமுத்தாறுஅணைக்கு விநாடிக்கு 4 கனஅடி நீர் வந்தது. 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 88.40 அடியாக இருந்தது.
வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 42.81 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.53 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 5 அடியாகவும் இருந்தது. தென்காசி மாவட்டம் கடனாநதி அணை நீர்மட்டம 66.90 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 56.88 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 50.03 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 28.50 அடியாகவும் இருந்தது. அடவிநயினார் அணை வறண்டு கிடக்கிறது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 4 மிமீ மழை பதிவானது. நேற்று பகலில் பணகுடி, காவல்கிணறு, வள்ளியூர், களக்காடு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago