விழுப்புரம் மாவட்டத்தில் யாருக்குஅமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்பது பேசும் பொருளாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளை திமுக பெற்றுள்ளது. இத்தொகுதிகளில் திருக்கோவிலூர் தொகுதியில் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளரான பொன்முடி, விக்கிரவாண்டி தொகுதியில் மத்திய மாவட்ட செயலாளரான புகழேந்தி, செஞ்சி தொகுதியில் வடக்கு மாவட்ட செயலாளரான மஸ்தான், விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அதிமுக வடக்கு மாவட்ட செயலளரான லட்சுமணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருக்கோவிலூர் தொகுதி கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டத்தில் அடங்கும் என்பதால்பொன்முடி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து அமைச்சராவது உறுதியாகிவிட்டதாகவும், அவருக்கு நிதித்துறை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மற்ற 3 திமுக எம்எல்ஏக்களில் யாருக்கு அமைச்சர் பதவி என்ற கேள்விதற்போது பேசும் பொருளாகிஉள்ளது. இது குறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியது:
கட்சியில் சீனியரான புகழேந்தியும், மஸ்தானும் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். இதில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் மஸ்தானும், மாவட்டத்தில் பெரும்பான்மையான பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் புகழேந்தியும், அதிமுகவின் சீனியர் அமைச்சரை வென்று விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்றலட்சுமணன் ஆகியோரும் அமைச்சராக தகுதி உள்ளவர்கள்தான்.
இப்படி 3 பேருக்கும் அமைச்சராக தகுதி இருப்பதால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago