சட்டத்துக்கு புறம்பாக - குழந்தைகளை தத்தெடுத்தால் புகார் தெரிவிக்க அழைப்பு :

By செய்திப்பிரிவு

சட்டத்துக்கு புறம்பாக குழந்தை களை தத்தெடுத்தால் புகார் அளிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகளைத் தத்தெடுப்பது குற்றமாகும். மீறி சட்டத்துக்கு மாறாக குழந்தைகளை வாங்குவ தும், விற்பது மற்றும் அதற்கு துணையாக செயல்பட்டாலும் இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவோர் www.CARA.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மேலும் இதுதொடர்பான விவரங்கள் அறியவும், சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகளை தத்தெடுத் தல் தொடர்பாக தகவல் தெரிவிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மோகனூர் சாலை, நாமக்கல் என்ற முகவரியில் அணுகலாம். மேலும், 04286-233103 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதுபோல, பராமரிக்கும் கரங்கள் சிறப்பு குழந்தைகள் தத்தெடுப்பு மையம், பெருமாம் பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் மற்றும் 1098 என்ற சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்