தென்காசி மாவட்டத்தில் அமமுக, மநீம, நாம் தமிழர், புதிய தமிழகம் உட்பட 64 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
வாசுதேவநல்லூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன் 16,731 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். அமமுக 4-ம் இடத்துக்கும், புதிய தமிழகம் 5-ம் இடத்துக்கும், சமக நோட்டாவை விட பின்தங்கி 7-ம் இடத்துக்கும் தள்ளப்பட்டன.
தென்காசி தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் வின்சென்ட் ராஜ் 15,336 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். அமமுக 4-ம் இடம், மக்கள் நீதி மய்யம் 5-ம் இடம், புதிய தமிழகம் கட்சி நோட்டாவை விட பின்தங்கி 7-ம் இடம் பிடித்தன.
கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவிலில் அமமுக 3-ம் இடம், நாம் தமிழர் கட்சி 4-ம் இடம், மக்கள்நீதி மய்யம் 5-ம் இடத்தை பிடித்தன.
ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அ.ஹரி 37,727 வாக்குகள் பெற்று மூன்றாம்இடத்தை பிடித்தார். நாம் தமிழர் கட்சி 4-ம் இடம், தேமுதிக 5-ம் இடம்,மக்கள் நீதி மய்யம் நோட்டாவை விட பின்தங்கி 7-ம் இடம் பிடித்தன. புதிய தமிழகம் கட்சி 8-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் முதலிடம்,இரண்டாம் இடத்தை பிடித்தவர்கள் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். ஆலங்குளம் தொகுதியில் முதல் 3- இடங்களை பிடித்தவர்கள் தவிர மற்றவர்கள் டெபாசிட் இழந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் 75 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், சங்கரன்கோவிலில் 13 பேர், வாசுதேவநல்லூர் 9, கடையநல்லூர் 19, தென்காசி 16 மற்றும் ஆலங்குளம் தொகுதியில் 7 பேர் என 64 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக கூட்டணி வேட்பாளர்கள் யாருக்கும் டெபாசிட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago