வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிப்பதால் - புதிதாக 1,000 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் : ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவு

By செய்திப்பிரிவு

வேலூரில் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி மற்றும் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் 1,000 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப் படவுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. மாவட்டத் தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 498-ஆக இருந்தது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கரோனா வார்டுகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் ஆயிரம் படுக்கை வசதியுடன் சித்த மருத்துவ சிகிச்சை முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கும் நிரம்பியுள்ளதால் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரியில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் இயங்கியது. இந்தாண்டு வாக்கு எண்ணிக்கை காரணமாக அங்கு புதிய மையம் ஏற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், வாக்கு எண் ணிக்கை முடிவடைந்த நிலையில் அங்கு 700 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யர் சண்முகசுந்தரம் நேற்று கல்லூரியில் ஆய்வு செய்ததுடன் விரைவில் கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரியில் 700 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை வார்டு ஏற்படுத்தப் படவுள்ளது.

அதேபோல், வாக்கு எண்ணிக்கை மையமாக இருந்த குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் 300 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை வார்டு அமைக் கப்படவுள்ளது. இந்த மையங்கள் நாளை (இன்று) முதல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் முதற்கட்டமாக 210 படுக்கைகளுடன் செயல்பட தொடங்கும்.

பின்னர், இந்த எண்ணிக்கை விரிவுபடுத்தப்படும்’’ என்றார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ், மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் டாக்டர் சித்ரசேனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்