திருவண்ணாமலையில் உணவு மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்காததால் கரோனா நோயாளிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கடந்த 10 நாட்களாக அதிகமாக உள்ளது. இதனால், தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 350-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்குவது இல்லை, வழங்கப்படும் உணவும் தரமானதாக இல்லை, கழிப்பறையை சுத்தம் செய்வது கிடையாது, அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்குவதில்லை என குற்றஞ்சாட்டி நேற்று போராட்த்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களிடம் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து கரோனா நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல் துறை யினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், சரியான நேரத்தில் உணவு வழங்குவதில்லை, பசியால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். கழிப்பறை மற்றும் தங்கும் இடங்களை தூய்மையாக வைத்திருப்பது கிடையாது. தண்ணீர் வசதி இல்லை. சுகாதாரம் இல்லை. வீட்டில் இருந்தால்கூட ஆரோக்கியமாக இருந்திருப் போம்” என்றனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் எடுத்துரைத்து தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆற்காடு
இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகேயுள்ள தனியார் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் உள்ளது. இங்கு, நூற்றுக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தரமான உணவுவழங்குவதில்லை என்றும் குளியலறை சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இந்நிலையில், அடிப்படை வசதிகள், தரமான உணவுகளை வழங்க வலியுறுத்தி சிகிச்சை மையத்தில் இருந்து கரோனா நோயாளிகள் நேற்று காலை வெளியேறி ஆற்காடு-செய்யாறு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் கலவை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணமூர்த்தி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தனர்.
கரோனா நோயாளிகள் மறிய லில் ஈடுபடக்கூடாது என்பதுடன் கோரிக்கை தொடர்பாக வருவாய்த்துறையினருடன் பேசி சரி செய் யப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று மறியலில்ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சிகிச்சை மையத்துக்குள் சென்ற னர். இதனால், ஆற்காடு-செய்யாறு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago