தி.மலை மாவட்டத்தில் - 6 தொகுதிகளில் திமுக வெற்றி :

By செய்திப்பிரிவு

திமுக தொடங்கிய பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தி.மலை தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி வாகை சூடியவர் தருமலிங்கம். இந்த வெற்றியானது அரை நூற்றாண்டை கடந்தும் தொடர்கிறது.

கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மலை மாவட்டத்தில் 6 தொகுதி யில் திமுகவும், 2 தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரசும் போட்டியிட்டது. இதில், 5 தொகுதி யில் திமுக வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் தோல்வியை தழுவியது. அதேபோல், 2 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இதனால், அடுத்து வரக்கூடிய தேர்தலில் 8 தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும் என்ற குரல் எதிரொலித்தது.

அதன்படி தி.மலை மாவட் டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் திமுக களம் இறங்கியது. அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில், தேர்தல் பணியை தீவிரப்படுத்தினார் எ.வ.வேலு. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக செல் வாக்காக உள்ள ஆரணி, போளூர், கீழ்பென்னாத்தூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

அதன் பயனாக கீழ்பென்னாத் தூர், செய்யாறு மற்றும் வந்த வாசி தொகுதிகளை திமுக கைப்பற்றியது. மேலும், தி.மலை, செங்கம் மற்றும் கலசப்பாக்கம் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மாவட்டத்தில் 6 தொகுதி களை கைப்பற்றியுள்ளன திமுக. இதன்மூலம், ஒரு தொகுதியை கூடுதலாக தன் வசப்படுத்திக் கொண்டது. ஆரணி தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோல்வியை தழுவியது. அதே நேரத்தில், போளூர் தொகுதியில் அசுர பலத்துடன் போட்டியிட்ட அதிமுக வெற்றி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்