நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 தொகுதிகளில் - வெற்றியை நிர்ணயிக்கும் 4.10 லட்சம் வாக்காளர்கள் :

By செய்திப்பிரிவு

\தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில். நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, கூடலூர் (தனி), குன்னூர் என 3 தொகுதிகளையும் சேர்த்து 69.86 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. உதகையில் 65.67 சதவீதமும், கூடலூரில் 71.39 சதவீதமும், குன்னூர் தொகுதியில் 69.86 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

மூன்று தொகுதிகளில் பதிவான வாக்குகள், உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று எண்ணப்படுகின்றன. உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் 98,690ஆண், 1,07,186 பெண், மூன்றாம் பாலினத்தவர் 6 என 2,05,882 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 69,232 ஆண், 70,394 பெண் என 1,39,626 வாக்களித்துள்ளனர். கூடலூர் (தனி) தொகுதியில் 92,366 ஆண், 96,789 பெண் என 1,89,155 வாக்காளர்கள் உள்ளனர், இதில் 67,398 ஆண், 69,098 பெண் என 1,36,496 பேர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். குன்னூர் தொகுதியில் 91,567 ஆண், 1,00,344 பெண், மூன்றாம் பாலினத்தவர் 2 என 1,91,913 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 65,863 ஆண், 68,068 பெண்,மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் என 1,33,932 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். இன்று நடைபெறும் வாக்கு வாக்கு எண்ணிக்கை பணியில் 159 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். கரோனா தொற்று காலமாக உள்ளதாலும், பல்வேறு விதிமுறைகளின் கீழ் வாக்கு எண்ணிக்கை நடப்பதாலும் மாலை 4 மணிக்குள் வாக்கு எண்ணிக்கையை முடித்து முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடுகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் மெல்வின் வாஸ், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்