ராமநாதபுரம் மாவட்டத்தில் 200 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தால் அதில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோான பரவல் 2-ம் அலை தீவிரமடைந்து வருகிறது.
தற்போது 1060 பேர் கரோனா தொற்றால் பாதிப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தினமும்
ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தில் 1470 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது. அதில் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் உள்ளிட்ட 600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 70 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
மாவட்டத்தில் 200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டால் 10 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்படுகிறது என சுகாதாரத்துறை துணை இயக்குநர் பொற்கொடி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago