புதுக்கோட்டை மாவட்டம் - கீரமங்கலத்தில் குடியிருப்பு பகுதியில் மலைபோல குவிந்துள்ள குப்பை : தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங் கலம் குடியிருப்பு பகுதியில் மலை போல குப்பை குவித்து வைக் கப்பட்டுள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

கீரமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 25,000 பேர் வசிக்கின்றனர். நூற்றுக் கணக்கான கடைகள் உள்ளன. இந்நிலையில், பேரூராட்சி நிர் வாகத்தின் மூலம் சேகரிக்கப்படும் குப்பையை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் சந்தை பகுதியில் மலைபோல குவித்து வைக்கப்பட்டு வருகிறது.

இதனால், அந்தப் பகுதியில் குடியிருப்போருக்கு துர்நாற்றம் வீசுவதாலும், காற்று வீசும்போது குப்பை பறந்து வந்து தண்ணீர் தொட்டிகளில் விழுவதாலும், இறைச்சிக் கழிவுகளை பறவைகள் தூக்கிச் சென்று போடுவதாலும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, குப்பைக் கிடங்கை ஊருக்கு வெளியே இடமாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் த.செங்கோடன் கூறி யது: தினந்தோறும் குப்பையை சேகரிக்கும்போது மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்க வேண்டும். மக்கும் குப்பையை இயற்கை உரமாக மாற்றவும், மக்காத குப்பையை அதற்குரிய தேவைகளுக்கு அனுப்பி வைக்கவும் பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. அத்தகைய திட்டங்கள் எதுவும் இந்த பேரூராட்சியில் இதுவரை செயல்படுத்தவில்லை.

மேலும், குப்பையை கொட்டு வதற்கென பிரத்யேக குப்பைக் கிடங்கு இல்லாததால், ஆற்றிலும், குளத்திலும் கொட்டுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சந்தைப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.

இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த காலி பாட்டில்கள் என கலவையாக மலைபோல குவிந்துள்ளன. இதனால், தொற்றுநோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பா.சுப்பிரமணியன் கூறியது: அரண்மனைக்கொல்லை அருகே குப்பைக் கிடங்குக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பையை பிரிப்பதற்கென கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன் னும் ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, குப்பைக்கிடங்கு அங்கு மாற்றப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்