ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.10.38 கோடிக்கு மதுபாட்டில்கள் விற் பனையாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் மே 1-ம் தேதியான நேற்று தொழிலாளர் தினம் என்பதால் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலூர் மற்றும் அரக்கோணம் டாஸ்மாக் மாவட்டங்களில் உள்ள மதுபானக் கடைகளின் மதுப்பிரியர்களின் கூட்டம் நேற்று முன்தினம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், இரண்டு நாட்களுக்கு தேவையான மது வகைகளை அதிகளவில் வாங்கிச் சென்றனர்.
சில மதுபானக் கடைகளில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு முண்டியடித்துக் கொண்டு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். அதன்படி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 116 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.6 கோடியே 36 லட்சம் மதிப்பிலான ஹாட் வகை மதுபாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் விற்பனையானது.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக் கோணம் டாஸ்மாக் மாவட்டத்தில் மொத்தமுள்ள 88 மதுபானக் கடை களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4 கோடியே 2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் விற்பனையானது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.10 கோடியே 38 லட்சத்துக்கு மதுபாட்டில்கள் விற்பனை யாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago