தொழிலாளர் தினத்தையொட்டி - வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கவுரவிப்பு :

By செய்திப்பிரிவு

தொழிலாளர் தினத்தை யொட்டி வேலூர் மாநகராட்சி யில் தூய்மைப் பணியாளர் களுக்கு இனிப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் தூய்மைப் பணியாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தினசரி வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து அதனை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர டெங்கு கொசு ஒழிப்பு, பன்றிக் காய்ச்சல் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, கரோனா ஒழிப்பு பணியில் தூய்மைப் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களையும் சுத்தம் செய்வதுடன் வீடு, வீடாகச் சென்று கபசுர குடிநீர் விநியோகம் செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மே 1 தொழிலாளர் தினத்தை யொட்டி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்க மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆணையர் சங்கரன் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

மேலும், இனிப்புகள் மற்றும் கையுறைகள் போன்றவற்றை வழங்கினார். அப்போது, மாநகர நல அலுவலர் டாக்டர் சித்ரசேனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்