தமிழகத்தில் 3 ஆயிரம் சதுரடி பரப்பளவு கடைகளை மூட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி வேலூரில் வணிகர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையை சமாளிக்க அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடு களுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, 3 ஆயிரம் சதுரடி பரப்பளவுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரம் சதுரடி பரப்பளவுள்ள கடைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரசின் இந்த அறிவிப்புக்கு வேலூர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். அரசின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் வியாபாரிகள் ஒன்று திரண்டு கருப்புக் கொடியுடன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவர் ஞானவேலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஏவிஎம் குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் பாலு, ரமேஷ்குமார், நகை அடகு வணிகர்கள் சங்க துணை செயலாளர் ருக்ஜி ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஞானவேலு கூறும்போது, ‘‘பெரிய பரப்பளவு கடைகளை மூடுவதால் சிறிய பரப்பளவு கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால், கரோனா பரவும் அபாயம் இருப்பதால் இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். இதற்கு, பதிலாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கலாம். அதேபோல், ஊரடங்கு அறிவிக்கும்போது வணிகர் சங்கங்களையும் அரசு கலந்தாலோசிக்க வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago