மாரி, ராஜா ராணி, கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் செல்லதுரை (84) நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.
நாடக நடிகரான செல்லதுரை, மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். எம்ஜிஆர் நடித்த ‘பணக்காரக் குடும்பம்’ படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு படங்களில் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்களில் இவரது கதாபாத்திரம் தனித்துப் பேசப்பட்டது.
குறிப்பாக, ராஜா ராணி, கத்தி, தெறி, மாரி, நட்பே துணை போன்ற படங்களில் இவரது நடிப்புக்கு தனி ரசிகர் வட்டாரமே உருவாகின. மாரி படத்தில் இவர் பேசும் ‘அப்படியா விஷயம்’ என்ற வசனம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். அதேபோல, `தெறி' படத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தந்தையாக, உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சென்னை பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று சென்னையில் நடைபெற்றன. செல்லதுரையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago