2 ஊழியர்களுக்கு கரோனா தொற்று - சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் மூடல் : கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது

By செய்திப்பிரிவு

சேத்துப்பட்டில் கரோனா தொற்றுக்கு 2 ஊழியர்கள் பாதிக்கப்பட்டதால் வட்டாட்சியர் அலுவலகம் நேற்று மூடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. பொதுமக்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகி யுள்ளனர். அரசுப் பணியில் உள்ள கடை நிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவது தொடர்கிறது.

ஆரணி கோட்டாட்சியர் பூங்கொடி, கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டதால் ஆரணியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. இதேபோல், வங்கிகள் மற்றும் அஞ்சல் துறையில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவதால், அவர்கள் பணி செய்யும் அலுவலகங்கள் மூடப் பட்டு வருகின்றன.

இந்நிலையில், சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 2 ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சேத்துப்பட்டு நகரம் போளூர் சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் நேற்று மூடப்பட்டது. வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப் பட்டது.

மேலும், வட்டாட்சியர் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப் பட்டது. சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்