கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கரோனா பாதுகாப்பு மையத்தில் 250 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு போதிய அளவுக்கு ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் கரோனா தடுப்பு பாதுகாப்பு மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து சின்னசேலம் பேருந்து நிலையம் மற்றும் அம்சாகுளம் பகுதிகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.
அப்போது ஆட்சியர் தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசுஅறிவுறுத்தியுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சின்னசேலம் அருகே அம்சாகுளம் பகுதியில் உள்ள தேநீர் கடையொன்று, கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டு சுகாதாரத் துறை மூலம், அக்கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று இத்தேநீர் கடை செயல்பட்டால் கடையை மூட நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க,சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அயன்வேலூர் மாதிரி பள்ளி, அ.குமாரமங்களம் மாதிரி பள்ளி, ஜி.அரியூர் மாதிரி பள்ளி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கரோனா பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசுபொது தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கரோனா பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இம்மையத்தில் 250 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, போதிய அளவுக்கு ஆக்சிஜன் வசதிகள் தயார் நிலையில் உள்ளன. நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், போதியமருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மருத்துவமனை வளாகம் தினந்தோறும் தூய்மைப்படுத்தப்பட்டு சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் தேவையையொட்டி வீட்டைவிட்டு வெளியே வரும்போது சமூக பொறுப்புணர்வுடன் முகக்கவசம்அணிவதுடன், தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago