விழுப்புரம் ஆட்சியரிடம் - சலூன்களைத் திறக்க அனுமதி கோரி மனு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என முடி திருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் கட்சியின் சார்பில் விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு நேற்று வழங்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு கரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளமுடியாத நிலையில் உள்ளோம். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வீட்டு வாடகை, கடை வாடகை செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். தற்போது கடந்த 25-ம் தேதியில் இருந்து சலூன் கடைகளை திறக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தினசரி சலூன்களை திறந்து சம்பாதித்தால்தான் எங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும் என்கிற நிலையில்தான் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். எனவே, தமிழக அரசு எங்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையில் சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்