சிவகங்கையில் கரோனா சோதனைக்கு குவிந்த வேட்பாளர்களின் முகவர்கள் : கூடுதலாக 10 சதவீத பேருக்கு பரிசோதனை

தேர்தல் ஆணைய உத்தரவை யடுத்து சிவகங்கையில் கரோனா பரிசோதனை எடுக்க வேட்பாளர் களின் முகவர்கள் குவிந்தனர். கூடுதலாக 10 சதவீதம் பேர் பரி சோதனை செய்து கொண்டனர்.

தமிழகத்தில் வாக்கு எண் ணிக்கை நாளை மறுநாள் (மே 2) நடக்கிறது.

வேட்பாளர்களின் முகவர்கள், செய்தியாளர்கள் கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்து தொற்று பாதிப்பில்லை என சான்று பெற வேண்டும் அல்லது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவராக இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவி த்தது.

சிவகங்கையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடம், காரைக் குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தேவகோட்டை, மானாமதுரை அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் பொது சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பரி சோதனைக்காக வேட்பாளர்களின் முகவர்கள், செய்தியாளர்கள் குவிந்தனர்.

வாக்கு எண்ணிக்கை மையத் துக்கு ஒரு வேட்பாளருக்கு 21 முகவர்கள் அனுமதிக்கப்படுகின் றனர்.

ஆனால், இதில் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானால், மாற்று முகவரை நியமிக்க வேண்டும் என்பதால் கூடுதலாக 10 சதவீதம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்