பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. வெங்கடபிரியா தலைமையில், பெரம்பலூர் தொகுதி பொதுப் பார்வையாளர் மதுரிமா பருவா சென் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து ஆட்சியர் ப. வெங்கடபிரியா தெரிவித்தது:
பெரம்பலூர் தொகுதியில் உள்ள 428 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் வைத்து 31 சுற்றுகளிலும், குன்னம் தொகுதியில் உள்ள 388 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் வைத்து 28 சுற்றுகளிலும் எண்ணப்பட உள்ளன. இதில், பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளுக்கு 25 சதவீத இருப்புடன் மொத்தம் 102 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.
தபால் வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 36 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.
வாக்கு எண்ணும் பணியை கண்காணிப்பதற்காக 48 நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கணினி மூலம் சுழற்சி அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago