மாணவர்கள் மூலம் கரோனா விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில், கரோனா பரவல் குறித்து பொதுமக்களிடம் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, கடையநல்லூரில் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் தனியார் பள்ளி மாணவர்களால் யோகா, கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு கரோனா நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் பரிசளித்தார்.

தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் கரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை நூலகர் ஜெ.சுந்தர் வரவேற்று பேசினார். தென்காசி வாசகர் வட்ட பொருளாளர் சேகர் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தென்காசி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

தென்காசி அரசு தலைமை சித்த மருத்துவமனை சார்பில் சித்த மருத்துவர் செ.ஞானபொன்மலர், மருந்தாளுநர் உஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மூலிகைகளின் மருத்துவ பயன்பாடுகள் பற்றியும், மூச்சுப்பயிற்சி பற்றியும், கபசுரக் குடிநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்