காட்பாடி உழவர் சந்தையில் தடுப்பூசி போடாத வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வந்த உழவர் சந்தை, வாரச்சந்தை, காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகியவை வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, காட்பாடி ரயில் நிலையம் அருகே இயங்கி வந்த உழவர் சந்தை காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்துக்கு கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக தனியார் பள்ளி மைதானத்தில் இயங்கி வரும் உழவர் சந்தையில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக் கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் வியாபாரம் காலை 10 மணிக்கு முடிவடைகிறது. காட்பாடி வட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி, பழங்களை உழவர் சந்தையில் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா ? என 1-வது மண்டல சுகாதார அலுவலர் பாலமுருகன், ஆய்வாளர் டேவிட் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை ஆய்வு செய்தனர்.
அப்போது, உழவர் சந்தையில் காய்கறி விற்பனையில் ஈடுபட்டி ருந்த வியாபாரிகளிடம் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாரெல்லாம் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா? எத்தனை வியாபாரிகள் தடுப்பூசி போட வில்லை ? என்பது குறித்து விசா ரணை நடத்தினர்.
தடுப்பூசி போடாத வியாபாரி களை பட்டியலிட்ட மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், வியாபாரம் செய்ய அனுமதிக்க முடியாது என எச்சரித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago