வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் ஆம்புலன்ஸ் வாகனத் தில் பல மணி நேரம் கரோனா நோயாளிகள் காத்திருந்த சம்பவம் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்திருந்தாலும் 2,500-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் நாள்தோறும் படையெடுத்து வருவதால் அங்கு படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் பல மணி நேரம்காத்திருக்க வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்படுவதால் வசதியற்ற, ஏழை, எளிய மக்கள் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
அங்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் விரைவாககுணமடைந்து வீடு திரும்பாத தால், புதிதாக தொற்று ஏற்பட்டவர் களுக்கு படுக்கை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டு முன்பாக 50-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள், அனுமதிக்காக காத்திருக்கும் நிலை கடந்த சில நாட்களாக காணப்படுகிறது. இதை சமாளிக்க முடியாத மருத்துவமனை நிர்வாகம், கரோனா தொற்று தீவிரமடையாத நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கி, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி மருந்துகளை சாப்பிட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவு றுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று அதி காலை சுமார் 10-க்கும் மேற்பட்டஆம்புலன்ஸ் வாகனங்கள் கரோனா நோயாளிகளுடன் அவசர சிகிச்சை பிரிவு முன்பு பல மணி நேரம் காத்திருந்தனர்.
போதிய படுக்கை மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் தாங்கள் காக்க வைக்கப்பட்டதாக கரோனா நோயாளிகள் குற்றஞ் சாட்டினர். இதில், சில நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனத்தை விட்டு வெளியே இறங்கி வந்து அங்கும், இங்கும் சுற்றிய சம்பவமும் நிகழ்ந் ததால் அங்குள்ள பலருக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago