திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 2 மையங்களில் பணியாற்று வதற்காக நியமிக்கப்பட்டுள்ள 171 நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் வரும் மே 2-ம் தேதி எண்ணப்படவுள்ளன. திருவண்ணா மலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெறும் வாக்குகள் எண்ணும் பணிக்காக 171 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வங்கிகள், எல்ஐசி மற்றும் அஞ்சல் துறைகளில் பணி யாற்றும் அலுவலர்கள், நுண் பார்வையாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்புரையாற்றினார். அப்போது அவர், நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், தங்களது கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அவர், திருவண் ணாமலை நகரம் பெரும்பாக்கம் சாலை, இந்திரா நகர், வ.உ.சி நகர் 7-வது வீதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு சிறப்பு காய்ச்சல் முகாமை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர், பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம், அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை கேட்டறிந் தார். இதில், துணை பதிவாளர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago