ரூ.3 ஆயிரம் ஓய்வூதிய உதவித் தொகை பெற இணையதளம் மூலம் வரும் மே 19-ம் தேதிக்குள் முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஓய்வூதிய உதவித் தொகை மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதியத் தொகையை பெற www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளி களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், அகில இந்திய பல்கலைக் கழங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங் களால் நடத்தப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி ஆகியவை தகுதியான விளையாட்டு போட்டிகளாகும்.
01-04-2021-ம் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்த வர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப் பிக்கும் நபர்களின் மாத வருமானம் ரூ.6 ஆயிரம் மிகாமல் இருக்க வேண்டும். முதியோருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை. வரும் மே 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மேலும். விவரங்களுக்கு, 04175 – 233169 என்ற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago