ராமநாதபுரம் வாரச்சந்தை மூடப்பட்டதால் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கரோனா இரண்டாம் அலையால் தொற்று வேகமாகப் பரவுவதையடுத்து தமிழகத்தில் ஏப்.20 முதல் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமலானது.
ராமநாதபுரத்தில் புதன்தோறும் நடை பெறும் வாரச்சந்தை நடைபெறாது என கடந்த திங்கட்கிழமை நகராட்சி நிர் வாகம் அறிவித்தது. இதனால், நேற்று வாரச்சந்தை பூட்டப்பட்டது. ஆனால், காய்கறி, பழங்கள், பலசரக்குப் பொருட்களுடன் வியாபாரிகள் ராமநா தபுரம் வாரச்சந்தைக்கு நேற்று காலை வாகனங்களில் வந்திறங்கினர்.
வாரச்சந்தைப் பூட்டியிருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். போலீஸார் அவர் களை கடைபோடாமல் திரும்பிச் செல்ல அறிவுறுத்தினர்.
ஆனால், முன்கூட்டியே தங்க ளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், வாரச்சந்தைக்கு வெளியே கடைபோட அனுமதிக்க வேண்டும் என்றும் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறு கையில், "ஒவ்வொருவரும் ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை முதலீடு செய்து காய்கறி, பழங்களை கொள்முதல் செய்து வந்தோம்.
திடீரென சந்தை மூடப்பட்டதால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக் கப்பட்டுள்ளது," என்றனர்.
நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் கூறும்போது, "திங்கள்கிழமையே வியாபாரிகளை அழைத்துத் தெரிவித் துவிட்டோம். மேலும், நாளிதழ்கள் மூல மும் வாரச்சந்தை நடைபெறாது என அறிவித்துவிட்டோம்.
கரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் கடைகளை அனுமதிக்க முடியாது," எனத் தெரிவித்தார். இதையடுத்து வியா பாரிகள் அங்கிருந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago